பயிற்சியின் போது மதுரு ஓயாவில் இலங்கை விமானப்படை பெல் 212 ஹெலிகாப்டர் விபத்து!

ஹிங்குராக்கொட விமானப்படை தளத்தில் இருந்து பயிற்சிக்காக புறப்பட்ட பெல் 212 ரக உலங்கு வானூர்த்தி விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலங்கு வானூர்தி மாதுருஓயா நீர்த்தேக்கத்தில் விபத்துக்குள்ளானதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் உறுதி செய்துள்ளார்.

விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக விமானப்படை பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

சிலர் காயமடைந்துள்ளதாகவும், மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் விமானப்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இரண்டு விமானிகள் உட்பட 12 பேர் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 10 பேர் மீட்கப்பட்டுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.