யாழ். பல்கலை பொன்விழா பிரமாண்டமாக பிரான்ஸில்! – ஜூன் 8 ஆம் திகதி நடைபெற ஏற்பாடு.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பொன்ழா நிகழ்வுகள் பிரான்ஸில் ஜூன் 8 ஆம் திகதி பிரமாண்டமான முறையில் கொண்டாடுவதற்கான ஒழுங்குகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பிரான்ஸ் தலைநகர், பரிஸின் புற நகர் பகுதியான Villeneuve Saint- Georges எனும் இடத்தில் உள்ள Espace Shine மண்டபத்திலே இந்தப் பொன்விழா நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

பிரான்சில் வாழும் பழைய மாணவர்கள் மட்டுமன்றி ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் யாழ். பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.

பாரம்பரிய மற்றும் கலாசார கலை நிகழ்ச்சிகளும் இரவு விருந்தும் கொண்ட இந்த நிகழ்வில், யாழ்.பல்கலைகழத்தில் கற்ற ஆளுமைகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பிக்கும் வகையில் இந்த நிகழ்வு அமைய இருக்கின்றது.

யாழ். பல்கலைக்கழகத்தினதும், வடக்கு – கிழக்கு பிரதேச வளர்ச்சிக்கும் பல முயற்சிகளை செய்து வரும் LIFT ஆய்வு அறக்கட்டளை அமைப்பின் அனுசரணையுடன், பிரான்ஸில் வாழும் யாழ். பல்கலைக்கழக பழைய மாணவர்களும், நலன் விரும்பிகளும் இந்த நிகழ்வை ஒழுங்கு செய்துள்ளார்கள்.

நிகழ்வுக்கான நுழைவுச் சீட்டுகளை இப்போது முதல் பெற்றுக்கொள்ளலாம் என்றும், விரும்புவோர், Jossey: 06 63 30 44 09 இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு உங்கள் நுழைவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும், மண்டப வாசலில் நுழைவுச்சீட்டுகள் விற்கப்படமாட்டாது என்றும் ஏற்பாட்டுக் குழுவினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு பற்றிய தகவல்களை அறிந்துகொள்ள +33 7 53 50 93 96 என்ற இலக்கத்துடன் WhatsApp மூலமாக அல்லது [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் மூலமாகத் தொடர்பு கொள்ளலாம் என்றும் ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.