ஜப்பானிய உதவி நிறுத்தப்படுவதால் இலகு ரயில் திட்டமும் நிறுத்தப்படுகிறது – பாட்டலி சம்பிக்க

அரசு கடும் பொருளாதார சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளது. முந்தைய ஆட்சியின் போது திட்டமிடப்பட்டிருந்த அதுருகிரியாவிலிருந்து கொழும்பு கோட்டை வரையிலான இலகு ரயில் திட்டம் கூட தற்போதைய அரசாங்கத்தின் மோசமான மேலாண்மை மற்றும் மோசமான நிதிக் கொள்கைகளால் நிறுத்தப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க நேற்றைய ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

இந்த திட்டத்திற்காக ஜப்பானிய அரசாங்கம் 1% வட்டி கடனுடன் முன்வந்திருந்தது என்று தெரிவித்த பாட்டலி , ஆனால் இப்போது ஜப்பானிய அரசாங்கம் இலங்கைக்கு நிதி வழங்குவதை நிறுத்திவிட்டது என்றார். அதற்கு பதிலாக, அரசாங்கம் 6% அதிக வட்டி விகிதத்தில் வேறோர் நாட்டிலிருந்து கடன்களைப் பெற முயற்சிக்கிறது என்று திரு. ரணவக்க மேலும் கூறினார்.

ஜிகா திட்டத்தின் கீழ் கடன் வழங்குவதை நிறுத்தி வைக்கிறது என ஜப்பான் சமீபத்தில் இலங்கை அரசுக்கு அறிவித்தது. இலங்கை அரசின் பணவியல் கொள்கை மற்றும் திருப்பிச் செலுத்தும் கொள்கைகளில் திருப்தி அடையத் தவறியதே இதற்குக் காரணம் என ஜப்பான் தெரிவித்துள்ளது .

அதன்படி, இலகு ரயில் திட்டம் நிறுத்தப்பட வேண்டும், நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் இதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்திற்கு புதிய முதலீட்டாளரைத் அரசு தேடுவதாக அமைச்சகம் கூறியுள்ளது.

Comments are closed.