பொது மக்களுக்கு விசேட அறிவிப்பு

தற்பொழுது நாட்டில் நிலவும் சுகாதார நிலைமையின் காரணமாக பொது மக்கள் ஒன்று கூடும் நிகழ்வுகளில் பங்கு கொள்வதை தவிர்த்துக்கொள்வது பொது மக்களின் பொறுப்பாகும் என்று பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

வீடுகளில் இருந்து வெளியேறும் போது முகக்கவசத்தை எப்பொழுதும் அணிந்து கொள்ள வேண்டும். இதேபோன்று கைகளை கழுவுதல், முகத்தை தொடுவதை தவிர்த்துக்கொள்ளுதல், தொற்றுக்குள்ளானவர் மற்றுமொரு நபருக்கு அது பரவாமல் இருப்பதற்கு எப்பொழுதும் சரியான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் பதில் சுகாதார பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

முதியவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த ஏனைய விடயங்களுக்கு வீடுகளில் இருந்து வெளியேறக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

திறந்த வெளியில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை முடிந்தளவில் குறைத்துக்கொள்ளுமாறும் பொது மக்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை மீண்டும் கொரோனா தொற்று பரவியுள்ள நிலையில் மக்கள் அநாவசிய பயணங்களைக் குறைத்துக்கொள்ளுமாறு பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

அனைத்து சந்தர்ப்பங்களிலும் சுகாதார வழிகாட்டி ஆலோசணைகளை கடைபிடிப்பது கட்டாயமாகும் என்றும் ஊரடங்குச் சட்டத்தை மீறுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Leave A Reply

Your email address will not be published.