ஆடைத்தொழிற்சாலையில் 569 பேருக்குக் கொரோனா.

ஆடைத்தொழிற்சாலையில்
569 பேருக்குக் கொரோனா

– மினுவாங்கொடையில் தொடர்கின்றது பி.சி.ஆர். பரிசோதனை

கம்பஹா மாவட்டத்திலுள்ள மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலை கொத்தணியில் மேலும் 467 ஊழியர்களுக்குக் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

இந்தத் தகவலை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா வெளியிட்டுள்ளார்.

மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் முதலாவதாகத் தொற்று உறுதியான பெண் மற்றும் அவரின் மகள் தவிர்ந்த 101 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதியானது.

இந்தநிலையில், குறித்த ஆடைத்தொழிற்சாலை கொத்தணியில் கொரோனாத் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 569 ஆக அதிகரித்துள்ளது.

மினுவாங்கொடையில் ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிய ஊழியர்களிடம் பி.சி.ஆர். பரிசோதனை தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது எனவும் இராணுவத் தளபதி மேலும் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.