ரணிலின் ஆதரவாளர் மீது முகமூடி அணிந்த கும்பல் தாக்குதல்..
நவகத்தேதாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலேவவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்குள் முகமூடி அணிந்த இருவர் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்த நபரை கடுமையாக தாக்கி சிகிச்சைக்காக நவகத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வெலவெவ பிரதேசத்தைச் சேர்ந்த சுனந்த திலகரத்ன என்ற 42 வயதுடைய நபரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.
1994 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய தேசியக் கட்சியின் தீவிர மற்றும் பலமான அங்கத்தவராக இருந்து வருகின்ற அவர், இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து ஒழுங்குபடுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
நேற்றிரவு 8.00 மணியளவில் முகமூடியுடன் வந்த முகமூடி அணிந்த இருவர் , தனது வீட்டின் முன் நாற்காலியில் அமர்ந்திருந்த போது தாக்கிவிட்டு வீட்டின் பின்னால் தப்பிச் சென்றதாக தாக்குதலுக்கு உள்ளான நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். தாக்குதலால் அவரது இடது கண் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை சிகிச்சைக்காக நவகத்தகம வைத்தியசாலையில் அனுமதித்தனர். தப்பியோடிய சந்தேக நபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. சம்பவம் தொடர்பில் நவகத்தேகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.