மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

டில்லிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் குயின்டன் டி காக், சூர்யகுமார் யாதவ் அரைசதம் கடந்து கைகொடுக்க மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐக்கிய அரபு எமிரேட்சில் 13வது சீசன் ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. அபுதாபியில் நடந்த லீக் போட்டியில் மும்பை, டில்லி அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாட்டம் செய்த டில்லி அணிக்கு ஷிகர் தவான் (69), கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் (42) கைகொடுக்க, 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்தது.

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய மும்பை அணிக்கு குயின்டன் டி காக் (53), சூர்யகுமார் யாதவ் (53) கைகொடுக்க, 19.4 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Leave A Reply

Your email address will not be published.