நல்லூர் பிரதேச சபை ஊழியர் சடலமாக மீட்பு.
![](https://cdn.ceylonmirror.net/tamil/wp-content/uploads/2024/10/9k-3.jpg)
யாழ்ப்பாணம், கோண்டாவில் பகுதியில் நல்லூர் பிரதேச சபை ஊழியர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்.
நல்லூர் பிரதேச சபையில் மேற்பார்வையாளராகக் கடமையாற்றும் 43 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே நேற்று சடலமாக மீட்கப்பட்டார்.
சம்பவ இடத்துக்கு விரைந்த கோப்பாய் பொலிஸார், சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தனர்.
உடற்கூற்றுப் பரிசோதனையில் கழுத்தில் சுருக்கிட்டதாலேயே மரணம் சம்பவித்தமை உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.