அவசர விவாதம் ஒன்றை நடத்த ஐநா மனித உரிமைகள் சபை இணக்கம்

நிற பேதம் மற்றும் பொலிஸ் வன்முறைகள் தொடர்பாக அவசர விவாதம் ஒன்றை நடத்த ஜெனீவா ஐ.நா மனித உரிமைகள் சபை இணக்கம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் ஜோர்ஜ் ப்லொய்ட் மற்றும் ரேஷார்ட் புரூக்ஸ் படுகொலைகளை தொடர்ந்து கண்டன போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

இதனையடுத்து ஆபிரிக்க நாடுகள் விடுத்த வேண்டுகோளுக்கு ஏற்ப இந்த அவசர விவாதத்தை நடத்த தயாராகியுள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் சபை தெரிவித்துள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் சபையின் 43வது கூட்டத்தொடர் கடந்த மார்ச் மாதம் கொவிட் 19 வைரஸ் பரவுவதை தொடர்ந்து இடைநிறுத்தப்பட்டதுடன், மீண்டும் அது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் பேரவையின் 14 ஆண்டுகால வரலாற்றில் நிற பேதம் தொடர்பாக அவசர விவாதம் ஒன்றுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ள ஐந்தாவது சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.