ரின்மீன், பருப்பு, சீனி, வெங்காயத்துக்கான இறக்குமதி வரி நீக்கம்; விலையும் குறைப்பு

ரின்மீன், பருப்பு, சீனி, வெங்காயத்துக்கான
இறக்குமதி வரி நீக்கம்; விலையும் குறைப்பு

ரின் மீன், சீனி, பருப்பு மற்றும் வெங்காயம் ஆகியவற்றுக்கான இறக்குமதி வரியை நீக்குவதற்கு அரசு தீர்மானித்துள்ளது.

இவ்வாறு இறக்குமதி வரி நீக்கப்படுவதால் இன்று நள்ளிரவு முதல் மேற்படி பொருட்களின் விலையும் குறையவுள்ளது.

இதன்படி ரின் மீன் (பெரிய செமன் ரின்) ஒன்றை 200 ரூபாவுக்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோவை 100 ரூபாவுக்கும், சீனி ஒரு கிலோவை 85 ரூபாவுக்கும் கொள்வனவு செய்யமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட ரூபா 500 இற்கு மேல் மதிப்புள்ள பொருட்களை, சதொச நிறுவனத்தில் கொள்வனவு செய்யும்போது ஒரு கிலோ பருப்பின் விலை ரூ. 150 இற்கு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தெங்கு அபிவிருத்தி சபை, குருநாகல் பெருந்தோட்ட நிறுவனம், சிலாபம் பெருந்தோட்ட நிறுவனம் ஆகியன தற்போது கொழும்பு நகரத்துக்கான தேங்காய் விநியோகத்தை அதிகரித்துள்ளன. எனவே, வாடிக்கையாளர்கள் சதொச விற்பனை நிலையங்களிலிருந்து நியாயமான விலையில் தேங்காய்களைப் பெற முடியும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

வாழ்க்கைச் சுவை மற்றும் கொரோனா வைரஸ் தாக்கம் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டே மக்களுக்கு இந்தச்  சலுகை வழங்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.