பெற்றோல் 92 குறைப்பு, ஒட்டோ டீசல், மண்ணெண்ணெய் அதிகரிப்பு

நள்ளிரவு (01) முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகள் திருத்தப்பட்டுள்ளன.

பெற்றோல் 92 விலை குறைக்கப்பட்டுள்ளது.

ஒட்டோ டீசல், மண்ணெண்ணெய் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

பெற்றோல் 95, சுப்பர் டீசல் விலைகளில் மாற்றம் இல்லை.

அந்த வகையில் CEYPETCO மற்றும் LIOC எரிபொருள் நிறுவனங்கள் பின்வருமாறு எரிபொருள் விலைகளை திருத்தியுள்ளன.

CEYPETCO/ LIOC

பெற்றோல் 92: ரூ. 2 இனால் குறைப்பு – ரூ. 311 இலிருந்து ரூ. 309
ஒட்டோ டீசல்: ரூ. 3 இனால் அதிகரிப்பு – ரூ. 283 இலிருந்து ரூ. 286
மண்ணெண்ணெய்: ரூ. 5 இனால் அதிகரிப்பு – ரூ. 183 இலிருந்து ரூ. 188
பெற்றோல் 95: விலையில் மாற்றமில்லை – ரூ. 371
சுப்பர் டீசல்: விலையில் மாற்றமில்லை – ரூ. 313
இதேவேளை, SINOPEC நிறுவனமும் எரிபொருள் விலைகளை திருத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.