சென்னை விமான நிலையம் மூடப்பட்டது
மோசமான வானிலை காரணமாக தமிழகத்தின் சென்னை விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.
அங்கு இரு வழி விமானப் பயணங்கள் சுமார் 7 மணி நேரத்துக்கு ரத்துச் செய்யப்பட்டிருப்பதாக இந்து நாளேடு கூறுகிறது.
இந்திய நேரப்படி இன்று நண்பகல் 12.30 மணியிலிருந்து இரவு 7 மணி வரை விமான நிலையம் செயல்படாது.
தமிழகத்தைப் பெங்கால் (Fengal) புயல் நெருங்கி வருவதை அடுத்து இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வகம், விமான நிறுவனங்கள் ஆகியவற்றுடன் கலந்தாலோசித்த பிறகு சென்னை விமான நிலையத்தைத் தற்காலிகமாக மூட முடிவெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.