சாமுதித சமரவிக்ரமவுக்குச் சொந்தமான யூடியூப் சேனலுக்கு எதிராக விசாரணைகள்.
நாமல் குமாரவினால் கர்தினால் மற்றும் கத்தோலிக்க மதத்தை அவமதித்தமை தொடர்பான விசாரணைகள் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் கையளிக்குமாறு ஊடகவியலாளர் சாமுதித சமரவிக்ரமவுக்குச் சொந்தமான யூடியூப் சேனலுக்கும் ஐந்து தொலைக்காட்சி நிலையங்களுக்கும் கொழும்பு இலக்கம் 8 நீதவான் தரங்க மஹவத்த உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் நேற்று முன் தினம் மனுவொன்றை தாக்கல் செய்து கொழும்பு அளுத்கடை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அந்த விசாரணை தொடர்பில், நாமல் குமார விடுத்த அறிக்கையை ஒளிபரப்பிய சேனல்களின் காட்சிகளை விசாரணைக்காக வழங்குமாறு நீதிமன்றம் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
தேசிய கத்தோலிக்க தொடர்பாடல் பணிப்பாளர் பிதா ஜூட் கிரிஷாந்த கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரிடம் செய்த முறைப்பாடு தொடர்பான விசாரணை தொடர்பாக தாக்கல் செய்த கோரிக்கையை பரிசீலித்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் கர்தினால்களிடம் வாக்குமூலம் பெற்றுள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
இந்த உத்தரவை தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் சமுதித சமரவிக்ரம யூடியூப் சேனல்களின் தலைவர்களுக்கு பிறப்பிக்குமாறு உத்தரவிட்ட நீதவான், விசாரணையின் முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு உத்தரவிட்டார்.