இரண்டாம் ஆம் அலை தொடங்கிய பின் மீண்டும் ஊரடங்கு அமுல்.

பிரான்ஸில் கொரோனா தொற்று 2 ஆம் அலை அதிகரிப்பால் இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் இன்று சனிக்கிழமை (17) இரவு 9 மணி முதல் அதிகாலை 6 மணிவரை ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது. பரிஸ் மற்றும் அதன் புறநகர்களோடு, மேலும் எட்டு நகரங்களுக்கு ஊரடங்கு சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அறிவித்துள்ளார்.

திருமணம், சமய நிகழ்வுகள், மண்டபங்களில் நிகழும் நிகழ்வுகள், மாணவர்களின் மாலை நேர சந்திப்புக்கள், என பொதுமக்கள் கூடும் வைபங்கள் அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது பிரான்ஸ் நாடு முழுவதும் அமுல்படுத்தப்படுகிறது.

பொது இடங்களில் , தனிப்பட்ட இடங்களில் 6 பேருக்கு மேல் கூடுவது தடுக்கப்பட்டுள்ளது.

இரவு 9 மணிக்கு பின்பு நீண்டதூர பயணம் பேருந்து, தொடருந்து அல்லது விமான பயணம் மேற்கொள்ள வேண்டும் எனில் உங்கள் பயணச்சிட்டையை காண்பித்து நீங்கள் செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்துக்களில் எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை. தொடருந்துகள், பேருந்துகள் வழமை போன்று இயங்கும். ஆனால் அங்கு சுகதார நிலமைகள் பிற்பற்றப்படவுள்ளது.

இதேவேளை ஊரடங்கு சட்டம் நிறைவடையும் வரை, ஈஃபிள் கோபுரம் (eiffel tower) காலை 10:30 மணி முதல் மாலை 5:30 வரை மாத்திரமே திறந்திருக்கும் எனவும் நிர்வாகம் அறிவித்துள்ளது.

2 ஆம் அலை தொடங்கிய பின் வைரஸ் தொற்றாளர்களின் புதிய எண்ணிக்கை 30,000 க்கு மேல் உயர்ந்துள்ளதாக பிரான்ஸ் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.