ஈரானுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடாத்த வேண்டுமென அமெரிக்கா கோரிக்கை

ஈரானுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடாத்த வேண்டுமேன அமெரிக்க அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கைதிகள் விடுதலை விவகாரத்தில் நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடாத்தி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஈரான் மீது காலவரையறையற்ற தடையை விதிக்க ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவை நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமெரிக்க கோரியுள்ளது.

அணு விவகாரங்கள் தொடர்பில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் கடுமையான முரண்பாட்டு நிலைமைகள் தொடர்ச்சியாக நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கைதிகளின் பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் நேரடிப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென அமெரிக்கா கோரியுள்ளது.

ஈரானுடன் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு விரும்புவதாக அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.

Comments are closed.