நரேந்திர மோடியின் பாதுகாப்பிற்கு ஒருநாளுக்கு ரூ.1.34 கோடி செலவிடப்படுகிறது.

மத்திய பட்ஜெட்டை (2025 -26) நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில் பிரதமரைப் பாதுகாக்கும் பணியை மேற்கொள்ளும் எஸ்பிஜி எனப்படும் சிறப்புப் பாதுகாப்புப் படைக்கு ரூ.489 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

பிரதமரின் பாதுகாப்பை உள்நாடு மற்றும் வெளிநாட்டில் உறுதி செய்யும் வகையில் சிறப்பு பாதுகாப்புக் குழு (Special Protection Group) இயங்கி வருகிறது.தற்போதைய நிலவரப்படி, இந்த எஸ்பிஜி பாதுகாப்பில் பிரதமர் மோடி மட்டுமே உள்ளார். இதற்கிடையில் எஸ்பிஜி பனியில் சுமார் 3,000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பிரதமரின் பாதுகாப்பிற்கு ஒருநாளுக்கு ரூ.1.34 கோடி செலவிடப்படுகிறது. ஒரு மணி நேரத்திற்கு ரூ.5.58 லட்சமும், ஒரு நிமிடத்திற்கு 9,303 ரூபாயும் செலவிடப்படுவது குறிப்பிடத்தக்கது

Leave A Reply

Your email address will not be published.