உழவு இயந்திரமும் டிப்பரும் நேருக்கு நேர் மோதி விபத்து.

டிப்பரும் உழவு இயந்திரமும் நேருக்கு நேர் மோதி விபத்து.
ஒருவர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி.

ஓட்டமாவடி பிரதேசத்திலிருந்து வாகனேரி நோக்கிச் சென்ற டிப்பர் வாகனம் எதிரே வந்த டிப்பர் வாகனமொன்று போவதற்கு வழிவிட்ட சந்தர்ப்பத்தில் டிப்பருக்கு பின்னால் வந்த உழவு இயந்திரம் டிப்பருடன் மோதியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

காயமடைந்த உழவு இயந்திரத்தின் சாரதி வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சிசைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இவ்விபத்துச் சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய ப் போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.