இலங்கை – லாகூர் விமானங்கள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்!

இலங்கையில் இருந்து பாகிஸ்தானின் லாஹோர் நகரம் நோக்கி இயங்கும் அனைத்து இலங்கை விமான சேவைகள், பாதுகாப்புச் சூழ்நிலைகளுக்கமைவாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக “SriLankan Airlines” இன்று (08) அறிவித்துள்ளது. இன்று அதிகாலை லாகூரில் மூன்று வெடிவிபத்துகள் இடம்பெற்றுள்ளன. வெடிவிபத்துகள், பாகிஸ்தான் கடற்படை இராணுவ கல்லூரிக்கு அருகிலும், லாஹோரின் பிரபலமான மாடல் டவுன் பூங்கா அருகாமையிலும் உள்ள உயர் பாதுகாப்பு பகுதிகளிலும் ஆகும்.