ஏழாலையில் வாள் வெட்டி தொழிலாளி ஒருவர் சாவு!

யாழ்ப்பாணம், ஏழாலை பகுதியில் தச்சுவேலை செய்துகொண்டிருந்த தொழிலாளி ஒருவர் பட்டறையில் வாள் வெட்டிய நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

ஏழாலை, மத்தியைச் சேர்ந்த பாலசிங்கம் ஜெகாஸ் (வயது – 42) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவந்துள்ளதாவது,

மேற்படி நபர் தனது வேலைத்தளத்தில் வேலை செய்துகொண்டிருந்தவேளை திடீரென அவரது நெஞ்சுப் பகுதியில் வாள் வெட்டி படுகாயம் ஏற்பட்டது.

இதனையடுத்து, அவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

இந்தநிலையில் பலத்த காயம் காரணமாக அதிக இரத்தம் வெளியேறிய நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளைத் திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.