இந்தியத் தூதுவருடன் நாமல் எம்.பி. சந்திப்பு.

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பு நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.
மேற்படி சந்திப்பின்போது இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான கூட்டாண்மையின் புதுப்பிப்புகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.