கொத்மலை பஸ் விபத்து: 21 பேர் பலி, 30க்கும் மேற்பட்டோர் காயம்!

கொத்மலை கெரடிமுல்ல பிரதேசத்தில் ஏற்பட்ட பஸ் விபத்தில் 21 பேர் உயிரிழந்த தோடு 30 இற்கும் அதிகமானோர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களில் ஆண்களும்,பெண்களும் அடங்குவாதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குருநாகல் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தே விபத்துக்குள்ளாகியுள்ளது.
காப்பாற்றப்பட்டவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் முயற்சி தீவிரமாக நடைபெற்று வருகிறாதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.