மாகாண சபைத் தேர்தலையும் அரசு உடனே நடத்த வேண்டும் – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்து.

மாகாண சபைத் தேர்தலையும் விரைவில் நடத்துமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் மஹிந்த அமரவீர, அரசிடம் வலியுறுத்தினார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கதிரைச் சின்னத்துக்கு வரவேற்பு கிடைத்துள்ளது எனவும், மாகாண சபைத் தேர்தலின்போது சிறப்பான வெற்றி கிடைக்கும் எனவும் அவர் கூறினார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மக்கள் வழங்கியுள்ள ஆணையின் பிரகாரம் எதிரணிகள் செயற்பட வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்தார்.