வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் அமைப்பின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிவைப்பு.
யாழ். நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்துக்கு முன்னால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல் இன்று முன்னெடுக்கப்பட்டது.

இதில் குரல் அற்றவர்களின் குரல் அமைப்பினர், பொது அமைப்பினர் இணைந்திருந்தனர்.

வீதியால் சென்ற மக்கள் உணர்வுபூர்வமாக முள்ளிவாய்க்கால் கஞ்சியை வாங்கி அருந்திச் சென்றனர்.