பிஎஸ்எல்வி சி-61 திட்டம் தோல்வி! – இஸ்ரோ அறிவிப்பு

பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட நிலையில் 3-வது அடுக்கு பிரிவதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் இந்தத் திட்டம் தோல்வியடைந்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

புவிக் கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவிவிருந்து இன்று(மே 18) காலை 5.59 மணியளவில் விண்ணில் செலுத்தப்பட்டது.

இஸ்ரோ சார்பில் புவிக் கண்காணிப்பு – தொலையுணா்வு பயன்பாட்டுக்காக கார்டோசாட், ஸ்காட்சாட், ரிசாட் உள்ளிட்ட பல்வேறு செயற்கைக்கோள்கள் உருவாக்கப்பட்டு, விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு வரும் நிலையில், புவிக் கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக அதிநவீன இஒஎஸ்-09 (ரிசாட்1-பி) என்னும் செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்திருந்தது.

இந்த செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்ட நிலையில், முதல் இரண்டு அடுக்குகள் வெற்றிகரமாக பிரிந்தது.

அதனைத் தொடர்ந்து தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 3-வது அடுக்கு பிரியாததால் இந்தத் திட்டம் தோல்வி அடைந்ததாகவும், இருப்பினும் இதுகுறித்து தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாகவும் இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.