மன்னாரில் உருக்குலைந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆண் ஒருவரின் சடலம்.

மன்னார், நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அச்சங்குளம் கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது.

இந்தச் சடலம் நேற்று இரவு அந்தப் பகுதிக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது

மேற்படி ஆணின் சடலம் முற்றிலும் சிதைவடைந்துள்ள போதும் சிதைவடையாமல் காணப்படும் ஆடைகளை வைத்து அவருக்கு 30 வயதுக்கு மேல் இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது

மீனவர்கள், அச்சங்குளம் கிராம சேவையாளருக்கு அறிவித்ததைத் தொடர்ந்து கிராம சேவையாளர், முருங்கன் பொலிஸார் மற்றும் அச்சங்குளம் கடற்படையினர் சடலத்தைப் பார்வையிட்டனர்

சடலத்தை மீட்ட முருங்கன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.