இந்தியத் துணைத்தூதரக அதிகாரியின் பூதவுடலுக்கு ஆளுநர் நேரில் அஞ்சலி!

வாகன விபத்தில் உயிரிழந்த இந்தியத் துணைத்தூதரக அதிகாரி அமரர் சச்சிதானந்தக் குருக்கள் பிரபாகரன் சர்மாவின் பூதவுடலுக்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

பிரபாகரன் சர்மாவின் பூதவுடல் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் அஞ்சலிக்காக நேற்று புதன்கிழமை வைக்கப்பட்டிருந்த சமயம் ஆளுநர் அஞ்சலி செலுத்தினார்.

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவும் இதில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.