அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை!
மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 23 ஆம் தேதி அண்ணா பல்கலைகழக வளாகத்தில் மாணவி மர்ம நபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். தொடர்ந்து புகாரளித்த நிலையில், போலீசாரால் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
ஞானசேகரன் மீது ஏற்கனவே வழிப்பறி, கட்டப்பஞ்சாயத்து என பல புகார்கள் உள்ளது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மகளிர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது.
இதில் காவல் துறை தரப்பில் 29 சாட்சிகள் நேரில் ஆஜராகி நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தனர். இந்நிலையில், ஞானசேகரன் மீது 11 குற்றமும் நிரூபணம் ஆகி உள்ளது. அதன் படி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
30 ஆண்டுகளுக்கு குறையாத ஆயுள் தண்டனையும், 90 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கால கட்டத்தில் எந்தவித சலுகையும் குற்றவாளிக்கு வழங்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
