கெஹலியவும் மகனும் பிணையில் விடுவிப்பு.
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல மற்றும் அவரது மகன் ரமித் ரம்புக்வெல ஆகியோரைப் பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கெஹலிய ரம்புக்வெல மற்றும் அவரது மகன் ரமித் ரம்புக்வெல ஆகியோர் இன்று செவ்வாய்க்கிழமை காலை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல மற்றும் அவரது மகன் ரமித் ரம்புக்வெல ஆகியோர் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
