பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்த இளைஞர்களுக்குப் பிணை.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை வளாகத்தினுள் அத்துமீறி நுழைந்து அடாவடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான இரண்டு இளைஞர்களையும் பிணையில் செல்ல பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தமது நண்பனைப் பார்வையிட வைத்தியசாலையில் பார்வையாளர் நேரம் முடிவடைந்த பின்னர் இரண்டு இளைஞர்களும் சென்றுள்ளனர்.

அவர்களை வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வைத்தியசாலைக்குள் அனுமதிக்காத நிலையில், அவர்களை மீறி உள்நுழைந்துள்ளனர்.

அதனையடுத்து வைத்தியசாலையில் பணியில் இருந்த பொலிஸார் இருவரையும் தடுத்து நிறுத்திய வேளை அவர்களுடனும் முரண்பட்டுள்ளனர். இருவரும் மதுபோதையில் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்ட நிலையில், இருவரையும் பொலிஸார் கைது செய்து மேலதிக சட்ட நடவடிக்கைக்காகப் பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

பருத்தித்துறை பொலிஸார் நீதிவான் நீதிமன்றத்தில் இருவரையும் முற்படுத்திய வேளை இருவர் சார்பிலும் முன்னிலையான சட்டத்தரணியின் பிணை விண்ணப்பத்தை ஏற்ற மன்று, இருவரையும் தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான பிணையில் செல்ல அனுமதித்தது.

Leave A Reply

Your email address will not be published.