தில்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு!

புது தில்லி: இந்தியாவில் 6,815 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தில்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் இன்று(ஜூன் 10) உயிரிழந்தார்.

90 வயது முதிர்ந்த அந்த பெண்மணி சிறுநீரக பாதிப்பு, இதய பிரச்னை உள்பட இணை நோய்கள் பலவற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில் அவர் இணை நோய்கள் காரணமாகவே உயிரிழந்தார் என்று மத்திய சுகாதாரத் துறையால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.