முற்போக்குக் கூட்டணி உறுப்பினர்களின் ஆதரவோடு ஹல்துமுல்லயில் ஆட்சியமைத்தது தேசிய மக்கள் சக்தி.

பதுளை, ஹல்துமுல்ல பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்துள்ளது. தமிழ் முற்போக்குக் கூட்டணி சார்பில் தெரிவான இரண்டு உறுப்பினர்கள் என்.பி.பிக்கு ஆதரவளித்தனர்.

ஹல்துமுல்ல பிரதேச சபைத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 9 இடங்களைப் பெற்றிருந்தது.

ஐக்கிய மக்கள் சக்திக்கு 6 இடங்களும், தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கு இரண்டு இடங்களும், ஸ்ரீலங்கா பொதுஜன ஐக்கிய முன்னணிக்கு இரண்டு இடங்களும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஒரு இடமும் , ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஒரு இடமும் கிடைக்கப் பெற்றன.

இந்நிலையிலேயே வாக்கெடுப்பின்போது தமிழ் முற்போக்குக் கூட்டணியின்` உறுப்பினர்கள் இருவரும் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்துள்ளனர்.

இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு, கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.