இலங்கையில் கொரோனா தொற்றினால் 20ஆவது உயிரிழப்பு.

இலங்கையில் கொரோனா தொற்றினால் பதிவான உயிரிழப்பு எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.

கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கொழும்பு 12 ஐச் சேர்ந்த 54 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த பெண் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டடுள்ளது.

இதற்கு முன்னர் இலங்கையில் கடந்த 27 ஆம் திகதி மாத்திரம் கொரோனா தொற்றினால் மூன்று பேர் உயிரிழந்தனர்.

வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய ஒருவரும் கொழும்பு 02ஐச் சேர்ந்த 87 வயதுடைய பெண்ணொருவரும் ஜா-எல பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

இதற்கு முன்னர் அதே வாரத்தில் ஒக்டோபர் 25 ஆம் திகதி 16 வது கொரோனா வைரஸ் தொடர்பான மரணம் பதிவானது. கொழும்பு – 02 ஐச் சேர்ந்த 70 வயதுடையவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

அத்தோடு 24 ஆம் திகதி 15 வது மரணமாக குளியாப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 56 வயதான இருதய நோயாளி உயிரிழந்தார்.

இதற்கிடையில், 14 வது கொரோனா வைரஸ் தொடர்பான மரணம் குறித்த தினத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் பதிவானது. இவ்வாறு உயிரிழந்தவர் குளியாப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டார்.

இலங்கையில் இன்று காலை வரையான காலப்பகுதியில் மொத்தம் 10,424 கொரோனா வைரஸ் நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.

சுகாதார அமைச்சின் அறிக்கையின் பிரகாரம் 6123 நோயாளிகள் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 4282 நோயாளிகள் முழுமையாக குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.