உள்ளூராட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற பெண்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பெண்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு இன்று இடம்பெற்றது.

யாழ். சமூக செயற்பாட்டு மையத்தில் ஏற்பாட்டில் இன்று காலை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வட்டாரங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 15 பெண்கள் கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன், யாழ். பல்கலைக்கழகத்தின் சட்டத்துறைத் தலைவர் கோசலை மதன், யாழ். மாநகர சபை மேயர் மதிவதனி விவேகானந்தராசா, வட்டாரங்களில் வெற்றி பெற்ற உள்ளூராட்சி சபைகளின் பெண் உறுப்பினர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது யாழ். பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை தலைவர் கோசலை மதன் சிறப்புரையாற்றினார்.

Leave A Reply

Your email address will not be published.