இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் அம்பாறை மாவட்டத்தில் 5 உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு நேற்று சனிக்கிழமை அக்கரைப்பற்றில் நடைபெற்றது.
அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தலைமையில் அவரது அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கலந்துகொண்டார்.
நிகழ்வில் திருக்கோவில் தவிர்ந்த பொத்துவில், ஆலையடிவேம்பு, காரைதீவு, சம்மாந்துறை, நாவிதன்வெளி ஆகிய 5 சபைகளின் 24 உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் காரைதீவு பிரதேச சபையின் உறுப்பினர்கள் நால்வரும் தனியாக ஓரறைக்குள் அழைக்கப்பட்டு கலந்துரையாடல் நடைபெற்றது.
எனினும், தவிசாளர் தொடர்பாக இன்னும் உறுதியான தீர்மானம் எட்டப்படவில்லை என்று தெரியவருகின்றது.



