மரக்கறி வியாபாரிகள் இருவர் கோரா விபத்தில் பரிதாபப் பலி!
வாகன விபத்தில் ஆண்கள் இருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் மாத்தறை, திக்வெலை பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 3.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வீதியில் பயணித்த ஹயஸ் வான் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆண்கள் இருவரும் உயிரிழந்துள்ளனர்.
மேற்படி இருவரும் படுகாயங்களுடன் திக்வெலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே உயிரிழந்துள்ளனர்.
திக்வெலையைச் சேர்ந்த 33 வயதுடைய நபரும், கம்புறுபிட்டியவைச் சேர்ந்த 49 வயதுடைய நபருமே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
இருவரும் மரக்கறி வியாபாரிகள் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஹயஸ் வானின் சாரதியைக் கைது செய்துள்ள பொலிஸார், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
