பிரசன்னவுக்கு விளக்கமறியல் மேலும் நீடிப்பு.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மஹர நீதிவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரசன்ன ரணவீர இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2010 ஆம் ஆண்டில் போலி ஆவணங்களைத் தயாரித்து கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள அரச காணி ஒன்றை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவைக் கைது செய்யுமாறு நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
ஆனால், அவர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்று நீண்ட காலமாகத் தலைமறைவாக இருந்தார்.
பின்னர், அவர் கடந்த மே மாதம் 7 ஆம் திகதி நீதிமன்றத்தில் சரணடைந்ததையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
