யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் தம்மை மாகாண சபைக்கு விடுவிக்க விண்ணப்பம்.
யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தின் பி்ரதேச செயலாளர் சாம்பசிவம் சுதர்சன் தன்னை மாகாண சபைக்கு விடுவிக்குமாறு மாவட்ட அரச அதிபரிடம் எழுத்தில் விண்ணப்பித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்ட நிர்வாகத்தில் மேலதிக அரச அதிபர் பதவிகள் மற்றும் பிரதேச செயலாளர் நியமனங்களில் கடும் பனிப்போர் நிலவுவதாகக் கூறப்படும் நிலையில் ஒரு பிரதேச செயலாளர் விரைவில் தன்னை மாகாண சபைக்கு விடுவிக்குமாறு விண்ணப்பிக்கவுள்ளார் எனச் செய்திகள் வெளிவந்தன.
இவ்வாறு செய்திகள் வெளிவந்த சில நாள்களில் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் சாம்பசிவம் சுதர்சன் மாவட்ட அரச அதிபர் ஊடாக விண்ணப்பித்துள்ளார் என அறிய வந்தது.
பிரதேச செயலாளர் விடுவிப்புக் கோரி விண்ணப்பித்துள்ளமை தொடர்பில் மாவட்ட அரச அதிபரிடம் தொடர்புகொண்டு கேட்டபோது விண்ணப்பக் கடிதம் கிடைத்ததை அவர் உறுதி செய்தார்.
