இந்தோனேசிய பயணக் கப்பலில் பாரிய தீ விபத்து!
இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி கடற்கரையில் பயணிக்கும் கிரிகோரியஸ் பார்சிலோனா V என்ற பயணக் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சிறு குழந்தைகளுடன் சில பெற்றோர்கள் கப்பலில் தங்கியிருந்த நிலையில், பயந்துபோன பயணிகள் தங்கள் உயிரைக் காப்பாற்ற கடலில் குதித்தனர். இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.
