வீழ்ந்து நொறுங்கிய பங்களாதேஷ் போர் விமானம்.
பங்களாதேஷில் அந்நாட்டு விமானப்படைக்கு சொந்தமான விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.உத்தரா – டயபாரியில் உள்ள மைல்ஸ்டோன் கல்லூரி வளாகத்தில் உள்ள ஒரு கட்டடத்தின் மீதி விமானம் மோதி வெடித்து தீப்பிடித்துள்ளது.
பயிற்சி விமானம் மதியம் 1.06 மணிக்கு புறப்பட்டு, புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு, பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
விபத்துக்குள்ளான F-7 BGI விமானம் விமானப்படைக்கு சொந்தமானது என்பதை பங்காளதேஷ் இராணுவத்தின் மக்கள் தொடர்பு அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
