தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி வழக்கிலிருந்து துமிந்த விடுவிப்பு.

தங்க முலாம் பூசப்பட்ட ரி – 56 துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க விடுவிக்கப்பட்டார்.

அவருக்கு எதிராகப் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி கல்கிஸை நீதிவான் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

பல வாரங்கள் தடுப்புக் காவலில் இருந்த பின்னர் கடந்த வாரம் அவருக்குப் பிணை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.