இளைஞர் ஒருவர் சுட்டுக்கொலை!

இளைஞர் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் களுத்துறை, கொஸ்கொட – துவாமோதர பகுதியில் இன்று அதிகாலை 5.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச்சூட்டில் 23 வயதுடைய இளைஞ ரே உயிரிழந்துள்ளார்.

மேற்படி இளைஞர் ஆமை வளர்ப்பு நிலையத்தின் உரிமையாளரின் மகன் அருத் மென்டிஸ் என்று தெரியவந்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு இனந்தெரியாத நபர்களால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச்சூட்டுக்கு ரி – 56 ரக துப்பாக்கிப் பயன்படுத்தப்பட்டிருப்பது பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.