திருமலையில் இரு குழுக்களிடையே மோதல்; இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை! – அறுவர் கைது; மேலும் ஒருவரைத் தேடி வலைவீச்சு.

திருகோணமலை, அலஸ்தோட்டம் பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியில் இன்று நடைபெற்ற விருந்தில் கலந்துகொண்டு அங்கிருந்து வெளியேறிய வேளை இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

திருகோணமலை, மடத்தடி – கிருஷ்ணர் ஒழுங்கையைச் சேர்ந்த டி.எச். வினோத் (வயது 33) என்ற இளைஞரே கொலை செய்யப்பட்டுள்ளார் என்று திருகோணமலை தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விருந்து நடைபெற்ற ஹோட்டலில் ஏற்பட்ட கருத்து மோதலே இந்தக் கொலைக்குக் காரணம் என்று பொலிஸார் கூறுகின்றனர்.

இந்தக் கொலை தொடர்பாக 6 சந்தேகநபர்களை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இறந்த இளைஞருக்கும் தாக்குதல் நடத்தியவர்களுக்கும் இடையிலான பழைய தகராறுதான் இந்த மோதலுக்கு அடிப்படைக் காரணமாக உள்ளது என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கத்தியால் குத்தப்பட்டு இறந்தவரின் தலையில் கல்லால் தாக்கப்பட்ட காயமும் காணப்படுகின்றது.

திருகோணமலை பொலிஸ் பிரிவு பதில் உதவி அத்தியட்சகர் சந்தன பஸ்நாயக்க தலைமையிலான தலைமையகப் பொலிஸார், இந்தச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொலையுடன் தொடர்புடைய மற்றொரு சந்தேகநபர் பொலிஸாரால் தேடப்பட்டு வருகின்றார்.

Leave A Reply

Your email address will not be published.