ரணிலின் வெளிநாட்டுப் பயணம்: சி.ஐ.டியில் ஆஜராகி சமன் வாக்குமூலம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தில் இன்று செவ்வாய்க்கிழமை முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கினார்.

ஜனாதிபதி நிதியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவின் வெளிநாட்டுப் பயணம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகக் குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தில் இன்று முன்னிலையாகுமாறு ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளரான சமன் ஏக்கநாயக்கவுக்கு நேற்று அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதனால், ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளரான சமன் ஏக்கநாயக்க குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தில் இன்று காலை 9.30 மணியளவில் முன்னிலையாகினார்.

ரணில் விக்கிரமசிங்கவின் வெளிநாட்டுப் பயணம் தொடர்பில் அவர் வாக்குமூலம் வழங்கிய பின்னர் குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தில் இருந்து வெளியேறினார்.

ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட செயலாளர் சாண்ட்ரா பெரேராவும் நேற்று மேற்படி விடயம் தொடர்பான விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.