23 வயது இளைஞர் வெட்டிக்கொலை! – 41 வயதுடைய சந்தேகநபர் கைது.
இளைஞர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை நாவுல பொலிஸ் பிரிவின் நிகுல பகுதியில் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் தம்புள்ளை, களுந்தாவை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.
தாக்குதலில் பலத்த படுகாயமடைந்த இளைஞர் நாலந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், பணத் தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது என்று தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய நிகுல பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ள்ளார்.
சம்பவம் குறித்து நாவுல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
