ஆடைத்தொழிற்சாலை பெண்ணிற்கு கொரணா தொற்றில்லை.

புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலை : பெண் ஊழியரிற்கு தொற்றில்லை.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து பேலியகொடை மீன் சந்தைக்கு கூலர்பாரவூர்தியில் சென்று வந்த சாரதி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந் நிலையில் அவரது மகள் புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுகின்ற நிலையில் அவரை தனிமைப்படுத்தி அவருக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

நேற்று யாழ்.பரிசோதனைக்கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போது
குறித்த ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய பெண் ஊழியரிற்கு தொற்று இல்லை என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள தகவல்கள் தெரிவித்துள்ளன.

பெண்ணின் தந்தையார் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் குறித்த பெண் ஊழியர் ஆடைத்தொழிற்சாலைக்கு சென்று வந்தமையால் ஆடைத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதுடன் அங்கு பணியாற்றிய தொழிலாளர்களிற்கும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

எவரிற்கும் தொற்று இல்லை என்பதால் குறித்த ஆடைத் தொழிற்சாலை இறுக்கமான சுகாதார நடைமுறைகளின் அடிப்படையிலேயே திறக்க அனுமதிக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் குறித்த தொழிற்சாலையில் பணியாற்றும் ஏழு பேர் வெளி மாவட்டங்களில் இருந்து புதுக்குடியிருப்பு திரும்பியிருக்கின்ற நிலையில் அவர்கள் தங்கியுள்ள இடங்களிலே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் தொழிற்சாலைக்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்படவில்லை என தெரியவருகிறது.

Leave A Reply

Your email address will not be published.