இந்தியக் கடற்பரப்பில் இரு இலங்கையர் கைது! – யாழ். மாவட்டப் பதிவு இலக்கம் கொண்ட படகும் சிக்கியது.
இந்தியக் கடற்பகுதியில் நின்ற படகில் இருந்த இரண்டு இலங்கையரை இந்தியப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்டப் பதிவு இலக்கம் கொண்ட படகு ஒன்று, இயந்திரக் கோளாறு காரணமாக இந்தியாவின் வேதாரண்யத்தை அண்டிய கடல் பகுதியில் இரண்டு இலங்கையர்களுடன் நின்றது. அந்தப் படகை இந்திய மீனவர்கள் இழுத்துச் சென்று கரை சேர்த்துள்ளனர்.

படகில் இருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவரும் வேதாரண்யம் பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
