பிரதமர் பதவியில் மாற்றம் வராது! – காரணத்தைக் கூறுகின்றது மொட்டுக் கட்சி.

“வெளியக அழுத்தம் காரணமாகவே பிரதமர் பதவிக்கு ஹரிணி அமரசூரிய நியமிக்கப்பட்டார். எனவே, அந்தப் பதவியில் மாற்றம் வராது.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகப் பேச்சாளர் சஞ்சீவ எதிரிமான்ன ஊடகங்களிடம் மேலும் கூறுகையில்,

“பிரதமர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்தும் முடிவுக்கு அநுர அரசு செல்லாது. சில விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் மாற்றம் நிகழாது. ஏனெனில் வெளியக அழுத்தத்தின் பிரகாரம் வழங்கப்பட்ட நியமனம் அது.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.