நம்பிக்கையில்லாப் பிரேரணையை தமிழரசு எம்.பிக்கள் ஆதரிப்பார்களா? – ஸ்ரீநேசன் எம்.பி. விளக்கம்.

“தற்போதைய பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர, கிழக்கு மாகாணத்தில் இராணுவத் தளபதியாக இருந்தபோது தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் மற்றும் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுடன் தொடர்புபட்டிருப்பதாக எமது கட்சி ஆய்வின்படி நிரூபிக்கப்படுமாக இருந்தால் அவருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்போம்.”

இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

‘பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரிப்பார்களா? இல்லையா?’ என்று வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.