யாழில் இந்தியச் சுதந்திர தினக் கொண்டாட்டம்.
இந்தியாவின் 79ஆவது சுதந்திர தினமான இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் இந்தியத் தேசியக் கொடி ஏற்றப்பட்டு, சுதந்திர தின நிகழ்வுகள் கொண்டாடப்பட்டன.
யாழ். மருதடி வீதியில் அமைந்துள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் காலை 9 மணியளவில் இந்தியாவின் தேசியக் கொடியைத் துணைத் தூதுவர் சாய் முரளி ஏற்றிவைத்தார்.

அதனைத் தொடர்ந்து, சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியக் குடியரசுத் தலைவரின் வாழ்த்துச் செய்தியை சாய் முரளி வாசித்தார்.
இந்த நிகழ்வில் இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
