இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! – ஒருவர் மரணம்; 22 பேர் காயம்.

தனியார் பஸ்ஸும் இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன், 22 பேர் காயமடைந்தனர்.

இந்தக் கோர விபத்து மொனராகலை, வெலியாய பகுதியில் இன்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

இலங்கைப் போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் சாரதியே உயிரிழந்துள்ளார்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.